ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி முர்முவுக்கு கண்புரை ஆபரேஷன்

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வடகிழக்கு மாநிலங்களுக்கான முதல் அரசு முறை பயணமாக கடந்த 12ம் தேதி திரிபுரா, அசாம் சென்று இருந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து 14ம் தேதி டெல்லி திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை நேற்று செய்யப்பட்டது. இது குறித்து ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், `ஜனாதிபதி முர்முவுக்கு இன்று (நேற்று) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: