×

அமீரகத்தை வீழ்த்தியது நெதர்லாந்து

உலக கோப்பை டி20 முதல் சுற்றில் நேற்று நடந்த மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதிய நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஜீலாங் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அமீரகம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முகமது வாசீம் அதிகபட்சமாக 41 ரன் (47 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அரவிந்த் 18, காஷிப் தாவூத் 15, சிராக் சூரி 12 ரன் எடுத்தனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 3 ஓவரில் 19 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். பிரெட் கிளாஸன் 2, டிம் பிரிங்கிள், ரோலாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து வென்றது. மேக்ஸ் 23, கோலின் ஆக்கர்மேன் 17, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16*, பிரிங்கிள் 15, பாஸ் டி 14, விக்ரம்ஜித் 10 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். பாஸ் டி ஆட்ட நாயகன் விருது பெற்றார். நெதர்லாந்து 2 புள்ளிகள் பெற்றது.

Tags : Netherlands ,Emirates , The Netherlands beat the Emirates
× RELATED ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை 10 விமான சேவை ரத்து பயணிகள் அவதி