ஏற்றிவிட்ட ஏணியை இந்துஜா மறக்கலாமா? ஆடியோ விழாவில் ஆர்.கே.சுரேஷ் கேள்வி

சென்னை: அறம் எண்டர்டெயின் மெண்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம், ‘காலங்களில் அவள் வசந்தம்’. கவுசிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோஷினி நடித்துள்ளனர். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி இசை அமைத்துள்ளார். இப்படத்தை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது. இப்படத்தின் ஆடியோ விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது: பேஸ்புக்கில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் நடிகை இந்துஜா நேர்காணலில் பேசியிருந்தார். எனது ‘பில்லா பாண்டி’ என்ற படத்தில் நான் தான் அவரை அறி முகப்படுத்தினேன்.

அப்போது எனது ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பில் தொடர்ந்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது அவர், ‘நான் நடித்த படங்களிலேயே மோசமானது ‘பில்லா பாண்டி’தான்’ என்று சொல்லியிருக்கிறார். அது ஒரு நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவுக்கு அப்படி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை ஒருபோதும் மறக்கக்கூடாது. ஏற்றிய ஏணியை உதைத்து தள்ளக்கூடாது. சினிமா ஒரு பெரிய வட்டமாகும். ஒரு ராட்டினத்தைப் போல் சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நாம் நினைவிலேயே வைத்திருக்க வேண்டும்.

Related Stories: