×

பசி குறியீட்டில் பின்தங்கிய இந்தியா பாஜ அரசின் தவறான கொள்கையே காரணம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு

சென்னை: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா பின்தங்கியிருப்பதற்கு பாஜ அரசின் தவறான கொள்கையே காரணம் என எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எஸ்.டி.பி.ஐ., தேசிய செயலாளர் பைசல் இசுதீன் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய பசி குறியீட்டில் முந்தைய தரவரிசையில் இருந்து இந்தியா 6  புள்ளிகள் பின்தங்கி 107 ஆக சரிந்தது அதிர்ச்சியளிக்கிறது.  பணக்காரர்களுக்கு ஆதரவான ஆளும் பாஜவின் தவறான பொருளாதாரக் கொள்கையின்  விளைவால் நேரிட்ட அவலம் இது. கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட 121 நாடுகளில், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளை விட பின்தங்கி இந்தியா 107வது இடத்தில் உள்ளது.

இதற்கு முன்பும், இந்தியா குறைந்த தரவரிசையில் இருந்தது.  இது தேசிய கவலைக்குரிய விசயமாகும். பசியிலிருந்து விடுபடுவது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முதன்மை குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மோசமான பசி குறியீடு தரவரிசை அதிர்ச்சியளிப்பதாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை உருவாக்கி, குடிமக்களுக்கு வேலைவாய்ப்பையும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.


Tags : India ,BJP government ,STBI Party , India lagging behind in hunger index due to wrong policies of BJP government: STBI Party Accusation
× RELATED மக்களை வஞ்சிக்கும் மோடியின் பாஜக அரசை...