அரசியலில் தலைவராக விரும்பும் இளைஞர்கள் கலைஞர் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும்: திருமாவளவன் பேச்சு

சென்னை: அரசியலில் தலைவராக வரவேண்டும் என விரும்பும் இளைஞர்கள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படித்து அறிந்துகொள்ள வேண்டும், என கொரட்டூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்பி பேசினார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், ‘இங்கு இவரை பெறவே யாம் என்ன தவம் செய்தோம்’ எனும் தலைப்பில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்.

கூட்டத்தில் திருமாவளவன் எம்பி பேசுகையில், ‘திமுக தலைவராக 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு மட்டுமல்ல, வரலாற்று தேவையும்கூட. ஸ்டாலின் கலைஞரின் பிள்ளை என்பதால் இது கிடைக்கவில்லை. 55 ஆண்டுகாலம் ஆற்றிய உழைப்புக்கு கிடைத்த பலன். தனக்கு பின்னர் கட்சியை வழிநடத்த கூடியவர் ஸ்டாலின் தான் என்பதை உணர்ந்து இந்த பொறுப்பை கலைஞர் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஜவாஹிருல்லா, நாஞ்சில் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர். தற்போதைய சூழலில் அரசியலில் தலைவராக வர வேண்டும் என விரும்பும் இளைஞர்கள் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

அரசியலில் மனிதர்களை வழிநடத்துவது மிக கடினம். அதிலும் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து வழிநடத்துவது சவால் நிறைந்தது. ஸ்டாலின். கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் ஒன்றுசேர்ந்த கலவைதான் மு.க.ஸ்டாலின். 2024 நாடாளுமன்ற தேர்தலில் சனாதன கட்சியை ஆட்சியை விட்டு ஓடஓட விரட்டவேண்டும். எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது,’ என்றார்.

Related Stories: