×

இரட்டை ரயில்பாதை பணிகள்: மதுரை- விருதுநகர் இடையே அக்.17, 18ல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில்: தெற்கு  ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: மதுரை - விருதுநகர்  பிரிவில் தண்டவாளத்தை இரட்டிப்பாக்கும் பணிகளுக்காக ரயில் போக்குவரத்து  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 20691 தாம்பரம் -  நாகர்கோவில் சந்திப்பு அந்தியோதயா அதிவிரைவு ரயில்  அக்டோபர் 17ம் தேதி  அன்று திண்டுக்கல் சந்திப்பில் நிறுத்தப்படும். இந்த ரயில் திண்டுக்கல் -  நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண்: 20692 நாகர்கோவில்  சந்திப்பு - தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில் அக்டோபர் 18ம் தேதி  நாகர்கோவில் சந்திப்புக்கு பதில் திண்டுக்கல் சந்திப்பில் இருந்து  சேவையைத் தொடங்கும். இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு-திண்டுக்கல் இடையே  ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண்: 16321 நாகர்கோவில் சந்திப்பு -  கோயம்புத்தூர் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 18ம் தேதி நாகர்கோவில்  சந்திப்புக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து சேவையைத் தொடங்கும்.  நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண்:  16322 கோயம்புத்தூர் சந்திப்பு - நாகர்கோவில் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ்  அக்டோபர் 18ம் தேதி திண்டுக்கலில் நிறுத்தப்படும். இந்த ரயில் திண்டுக்கல்  - நாகர்கோவில் சந்திப்பு இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண்:  16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 17 அன்று  குருவாயூரில் இருந்து புறப்பட்டு மானாமதுரை வழி செல்லும்.

ரயில் எண்:  16340 நாகர்கோவில் சந்திப்பு - மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில்  இருந்து அக்டோபர் 18ம் தேதி அன்று புறப்பட்டு மானாமதுரை வழியாக செல்லும்.

ரயில்  எண்: 22627 திருச்சி சந்திப்பு - திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி  எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து அக்டோபர் 18 புறப்படுவது மானாமதுரை வழி  இயக்கப்படும்.

ரயில் எண்: 16342 திருவனந்தபுரம் சென்ட்ரல் -  குருவாயூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து 18ம் தேதி  மாலை 5.30 மணிக்கு புறப்படுவது ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு  புறப்படும். 


Tags : Madurai- ,Virudhunagar , Double Rail Works: Change in train traffic between Madurai-Virudhunagar on October 17, 18
× RELATED திருப்பரங்குன்றம் தாலுகா...