×

புரோ கபடி லீக்: பாட்னாவை பந்தாடி பெங்கால் 3வது வெற்றி

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடிலீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் 25-18 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி 46-26 என தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற டெல்லி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

இரவு 9.30 மணிக்கு நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-பாட்னா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் 54-26 என பாட்னாவை பந்தாடியது. அந்த அணியின் கேப்டன் மணிந்தர்சிங் 12 புள்ளிகள் எடுத்தார். 4வது போட்டியில் பெங்கால் 3வது வெற்றியை பெற்று 15 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்று இரவு 7.30மணிக்கு புனேரி பால்டன்-யு மும்பா, இரவு 8.30 மணிக்கு உபி யோத்தா-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : Pro Kabaddi ,League ,Bengal ,Patna , Pro Kabaddi League: Bengal beat Patna for 3rd win
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை