×

விளையாடிய போது பலத்த காயம்; அடுத்தடுத்து 2 கபடி வீரர்கள் மரணம்: சட்டீஸ்கரில் அதிர்ச்சி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடந்த கபடி போட்டியின் போது அடுத்தடுத்த இரு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கன்கேர் மாவட்டத்தில் நடந்த ஹியா ஒலிம்பிக் போட்டியில் பலத்த காயம் அடைந்த பெண் கபடி வீராங்கனை சாந்தி மாண்டவி (30), என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொண்டகான் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினரான இவரது மறைவுக்கு, அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கான்கேர் மாவட்டம் மஜிபோராண்ட் பகுதியில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்ற சாந்தி மாண்டவி காயம் அடைந்தார். ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், மாந்தி மாண்டவி இறந்ததாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த 11ம் தேதி, ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் ஒருவர், போட்டியின் போது காயமடைந்து இறந்தார். அடுத்தடுத்து 2 கபடி வீரர்கள் இறந்த சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Chhattisgarh , Serious injury while playing; 2 Kabaddi players die in succession: Shock in Chhattisgarh
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...