×

அக்னி பாதை வீரர்களுக்கு 11 வங்கிகளில் வங்கிக் கணக்கு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியாவின் முப்படைகளிலும் இளைஞர்களை சேர்க்கும் வகையில் கடந்த ஜூன்  14ம் தேதி ஒன்றிய அரசு அக்னி பாதை திட்டத்தை அறிவித்தது. கடும்  எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தில் இளைஞர்கள் சேர்க்கை நடைபெற்று  வருகிறது. அடுத்தாண்டு ஜனவரிக்குள் அக்னிபாதை திட்டத்தின் முதல் பேட்ஜ்  வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கான வங்கி சேவையை அளிப்பதற்காக 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் போனப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், மூத்த வங்கி அதிகாரிகளுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இத்திட்டத்தில் சேரும் அக்னிபாதை வீரர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள், தொழில் முனைவோர் திறன்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஆகியன புரிந்துணர்வு போடப்பட்ட 11 வங்கிகளுடன் மேற்கொள்ள முடியும். அந்த வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகள் உள்ளன.



Tags : Agni Route , Bank account in 11 banks for Agni Path players: MoU signed
× RELATED அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக...