×

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தொடர் தாக்குதல்களால் ரஷியாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை: பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம்

கீவ்: உக்ரைன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷியா நடத்திய நிலையில், ரஷியாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.  உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.

மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. எனினும் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உக்ரைன்தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷியா நடத்திய நிலையில், ரஷியாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.ரஷியாவின் ஆயுதங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சில மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர்களின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன என்று களத்திலுள்ள ரஷிய தளபதிகளுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்று இங்கிலாந்து உளவு அமைப்பான ஜி.சி.எச்.க்யூ-வின் தலைவர் சர் ஜெரேமி ப்ளெமிங் கூறுகிறார்.


Tags : Russia ,Ukraine , Russia's Arms Shortage Caused by Russia's Series of Attacks on Ukraine: Defense Experts Skeptic
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...