வக்கீல்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் அடுத்த ஆண்டுக்கான பயனை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வௌியிட்டுள்ள அறிக்கையில், வழக்கறிஞர்களின் நலனுக்காக கடந்த 20 ஆண்டுகளாக குரூப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் வழக்கறிஞர்களின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வரும் இந்த குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த ஆண்டுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தொகையை வரும் 31ம் தேதிக்குள் வழக்கறிஞர்கள் செலுத்து வேண்டும். இன்சூரன்ஸ் தொகையை செலுத்துவதற்கான முறை அந்தந்த வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: