மலை ரயிலுக்கு 115வது பிறந்த நாள்

ஊட்டி: ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 1909 அக்டோபர் 15ம் தேதி ஊட்டி நகரம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி நீலகிரி மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46 கி.மீ. தூரம் உள்ள இப்பாதையில் 209 வளைவுகளும், 250 பாலங்களும், 16 சுரங்க பாதைகளும் உள்ளன. மலைகளின் நடுவே தவழ்ந்து வரும் இந்த ரயில் நூற்றாண்டை கடந்த நிலையில், இதில் பயணிக்க வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு விரும்புகின்றனர்.

மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் 115வது நீலகிரி மலை ரயில் தின விழா நேற்று ஊட்டி ரயில் நிலையத்தில் நடந்தது. மலைரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: