இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். அவரது இந்த பயணம் கன்னியாகுமரி, கேரளா, வழியாக கடந்த 30ம் தேதி கர்நாடகாவை அடைந்தது. நடையப்பயணத்தின் 38வது நாளாக கர்நாடகத்தில் 15வது நாளாக சனிக்கிழமை பயணித்தது. இதனையிடையே பல்லாரியில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்; இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர்  மோடி கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். 8 ஆண்டுகளில் இந்தியாவில் இதுவரை இல்லாத வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வை மக்களுக்கு அளித்து சாதனை படைத்துள்ளீர்கள். சிலிண்டர் விலை ரூ.400 இருக்கும் போது விமர்சித்தீர்கள். இப்போது ரூ.1000க்கும் மேல் விற்கப்படுகிறது.

கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேண்டுமானால் ரூ.80 லட்சம் செலுத்தி ஒருவர் ஆகலாம். காசு இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம், இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கலாம் என்றும் விமர்சனம் செய்தார்.

Related Stories: