×

அதியமான்கோட்டையில் வெட்ட வெளியில் மழை, வெயிலில் தவிக்கும் காலபைரவர் கோயில் குதிரை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற காலபைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அஷ்டமி, நவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் காலபைரவருக்கு நேர்த்திக்கடனாக பூசணியில் விளக்கேற்றி வழிபடுவர். இந்த கோயிலுக்கு சொந்தமான குதிரை ஒன்று பல மாதங்களாக கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் குதிரையை வணங்கி தேவையான உணவுகளை கொடுப்பர். ஆனால் குதிரையை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. கடந்த நான்கு நாட்களாக ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், வெயிலிலும் மழையிலும் தவித்து வருவதுடன் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை கண்ட பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் குதிரையை பாதுகாப்பான இடத்தில் கட்ட வேண்டும் என கூறியும் அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளனர்.



Tags : Athiyamankottai , Kalabhairava Temple Horse Suffering in the Sun and Rain Outside in Athiyamankottai: Officials Unaware
× RELATED கஞ்சாவை பதுக்கி விற்றவர் கைது