×

ஆசிய கோப்பையை வென்று 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி..!

சில்ஹெட்: ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியின் 8வது தொடர், வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் என 7 நாடுகள் பங்கேற்றன. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியா, அரையிறுதியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பை பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8.3 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 7வது முறையாக இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையை வென்றது.


Tags : Indian women's team ,Asia Cup , The Indian women's team won the Asia Cup and won the champion title for the 7th time..!
× RELATED மகளிர் ஆசிய கோப்பை 2024: ஜூலை 21ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்!