×

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 366 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2022 முதல் 14.10.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட  214 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 89 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 48 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 7 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த  2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி, என மொத்தம்  366 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 08.10.2022 முதல் 14.10.2022 வரையிலான ஒரு வார காலத்தில் 23  குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 1.தனசேகர் (எ) சாம்பார், வ/25, த/பெ.தங்கவேல், எண்.2/26, புஷ்பா நகர் 2வது பிளாக், நுங்கம்பாக்கம், சென்னை என்பவர் மீது 1 வழக்கு உள்ளது. 2.ராஜா, வ/33, த/பெ.அய்யனார், ஏரிக்கரை, எம்.ஜி.ஆர் தெரு, மதுரவாயல், சென்னை என்பவர் மீது 1 கொலை வழக்கு உட்பட 8 வழக்குகள் உள்ளது.

3.பார்த்திபன் (எ) சங்கு, வ/30, த/பெ.ரவி, எண்.25, எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை என்பவர் மீது 1 கொலை முயற்சி வழக்கு உள்ள நிலையில் மேற்படி மூவரும் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த 16.08.2022 அன்று குமார் (எ) குள்ளக்குமார் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 4.பார்த்திபன், வ/22, த/பெ.ரகு, எண்.30, எம்.கே.பி நகர், பெருங்குடி, சென்னை என்பவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக J-9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

5.வெங்கடேசன் (எ) சொட்டிங்  வெங்கடேசன், வ/32, த/பெ.முனியன், எண்.92, காந்தி நகர், பாடிகுப்பம், திருமங்கலம், சென்னை என்பவர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 20 வழக்குகள் உள்ள நிலையில் ஆதம்பாக்கம் பகுதியில் ஒருவரிடம் வழிப்பறி செய்த குற்றத்திற்காக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 6.அஜித்குமார் (எ) போங்கு, வ/22, த/பெ.ராகவன், எண்.179, கைலாச முதலி தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 4 வழக்குகள் உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.   

மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள்  தனசேகர் (எ) சாம்பார், ராஜா, பார்த்திபன் (எ) சங்கு, பார்த்திபன், வெங்கடேசன் (எ) சூட்டிங் வெங்கடேசன், அஜித்குமார் (எ) போங்கு ஆகிய 6 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 6 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 10.10.2022 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில் மேற்படி 6 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல, 7.அந்தோணி முத்து, வ/46, த/பெ.அடைக்கலம், காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை, 8.கணேஷ்பாபு (எ) பாபு (எ) கணேஷ், வ/45, த/பெ.பாலா, , காமராஜர் தெரு, புது லஷ்மிபுரம், கொளத்தூர், 9.R.கார்த்திகேயன், வ/48, த/பெ.ராஜமாணிக்கம், வ.உ.சி. தெரு, கருணாநிதி நகர், உள்ளகரம், சென்னை, 10.N.கார்த்திகேயன், வ/48, த/பெ.நாராணசாமி, கனகம்மாள் காலனி, பழவந்தாங்கல், சென்னை ஆகிய 4 நபர்களும், வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து, லோன் பெற்று பணமோசடி செய்தது தொடர்பாக, இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 11.சக்திவேல், வ/24, த/பெ.தேவராஜ், பெரியகூடல், ஷெனாய்நகர்,

சென்னை, இவரது சகோதரர் 12.சின்ராஜ், வ/25, த/பெ.தேவராஜ், பெரியகூடல், ஷெனாய்நகர், சென்னை, 13.அப்துல் மாலிக், வ/23, த/பெ.அன்வர் உசேன், பாலாஜி நகர், குன்றத்தூர், 14.பாலாஜி, வ/25, த/பெ.வேலுமணி, 1வது மெயின் ரோடு, ஷெனாய் நகர், சென்னை, 15.அப்பாஸ், வ/33, த/பெ.காஜி மொய்தீன், கோபாலபுரம் 1வது தெரு, திரு.வி.க.நகர், ஜவஹர் நகர் ஆகிய 5 நபர்களும், 05.09.2022 அன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்த வேலூர் சிறைவாசி பாலமுருகன் (எ) மதுரைபாலா என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றது தொடர்பாக J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் அந்தோணிமுத்து, கணேஷ்பாபு, R.கார்த்திக்கேயன், N.கார்த்திக்கேயன், சக்திவேல், சின்ராஜ், அப்துல்மாலிக், பாலாஜி, அப்பாஸ் ஆகிய 9 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 9 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 12.10.2022 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 9 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல, 16.கரண்குமார் (எ) ஸ்பீடு கரண் , வ/25, த/பெ.ரமேஷ், காசிபுரம் P பிளாக், காசிமேடு, சென்னை என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக, N-1 இராயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது 4 குற்ற வழக்குகள் உள்ளது. 17.ஜெகன், வ/29, த/பெ.பச்சையப்பன், மல்லிகை அவென்யூ நகர், கொளத்தூர் என்பவர் கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக, P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். ஜெகன் மீது ஏற்கனவே 1 வழிப்பறி வழக்கு உள்ளது. மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் கரண்குமார் (எ) ஸ்பீடு கரண் ஆகிய 2 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 13.10.2022 அன்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், எதிரிகள், 18.ரஞ்சித், வ/27, த/பெ.எழிலரசன்,  குமரன் குடில் 1வது தெரு, துரைப்பாக்கம் என்பவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக  மத்தியகுற்றப்பிரிவு,  சைபர் கிரைம் பிரிவிலும், 19.பிரகாஷ் (எ) சாம்பார் பிரகாஷ் (எ) தேவன் பிரகாஷ், வ/25, த/பெ.முருகன், எண்.7/8, 11வது  தெரு, பாடிபுதுநகர், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை என்பவர்  குற்றத்தில் ஈடுபட்டதற்காக V-3  ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திலும், 20.கார்த்திக்கேயன் (எ) கார்த்திக்  துப்பாக்கி கார்த்திக், வ/43, த/பெ.வெங்கடேசன், எண்.3, வஜ்ரவேல் நகர், கொளத்தூர், சென்னை 21.சரண், வ/24, த/பெ. சங்கர், எண்.411, சுதந்திர நகர் அவுசிங் போர்டு, ஆயிரம்விளக்கு, என்பவர் F-4 ஆயிரம்விளக்கு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.

இவர் மீது 5 வழக்குகள் உள்ள நிலையில்  கத்தியை  காட்டி மிரட்டிய குற்றத்திற்காக  ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திலும், 22. ரொசாரியோ குமார் (எ) சின்னா (எ) சின்ராசு, வ/25, த/பெ.சைமன், எண்.13/2,  NGO  காலனி, 3வது தெரு, வடபழனி, சென்னை என்பவர்  வடபழனி காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார் இவர் மீது 9 வழக்குகள் உள்ள நிலையில்  மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக வடபழனி காவல் நிலையத்திலும் 23. ஹரி (எ) ஹரிஹரன், வ/21, த/பெ.அப்பன்ராஜ், எண்.612, 6வது தெரு, சஞ்சய் நகர், வியாசர்பாடி, சென்னை என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதற்காக எழும்பூர் இரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள்  ரஞ்சித், பிரகாஷ் (எ)  சாம்பார் பிரகாஷ் (எ) தேவன் பிரகாஷ், கார்த்திக்கேயன் (எ) கார்த்திக் (எ) துப்பாக்கி கார்த்திக், சரண், ரொசாரியோகுமார் (எ) சின்னா (எ) சின்ராசு, ஹரி (எ) ஹரிஹரன் ஆகிய 6 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 6 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 14.10.2022 அன்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் மேற்படி 6 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை மற்றும் மைலாப்பூர் காவல் மாவட்டங்களில் தலா 2 குற்றவாளிகள், புளியந்தோப்பு, அடையார் மற்றும் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி என என மொத்தம் 7 குற்றவாளிகள் கடந்த 08.10.2022 முதல் 14.10.2022 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Chennai , 23 criminals were arrested under the Gangster Detention Act in Chennai in the last one week
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!