×

தா.பழூர் பகுதியில் தொடர் மழையால் 100 ஏக்கர் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் , காரைக்குறிச்சி, வடுவூர், சிங்கராயபுரம், சுத்தமல்லி, கோட்டியால், காடுவெட்டாங்குறிச்சி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர்.கடந்த மாதம் மக்காச்சோளம் அறுவடையை துவங்கிய நிலையில் தற்பொழுது வரை அறுவடை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் ஈரப்பதம் அதிகமாக உள்ள காரணத்தினால் அதனை உலர்த்தி விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்பொழுது தொடர்ந்து தூரலாகவும் கனமழையும் இருந்து வரும் காரணத்தினால் சரியான முறையில் மக்காச்சோளம் உலர்த்த முடியாமல் உள்ளது. அதனால் மக்காச்சோளம் விற்பனையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் அறுவடை செய்ய வேண்டிய மக்காச்சோளங்கள் தொடர் மொழியினால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்காச்சோளங்கள் முளைப்புத் திறன் அடைந்து விடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து பெண் விவசாயி வசந்தா கூறுகையில், தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் வயல்வெளியில் மக்காச்சோளங்கள் இருந்து வருகின்றது. நேற்று முன்தினம் அறுவடை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மழை வந்ததால் அறுவடை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை வந்து விட்டது. அதனால் மக்காச்சோளங்கள் முளைத்துவிடும் சூழல் ஏற்படுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை உலர்த்தி காய வைத்து விற்பனை செய்வதற்கான சூழ்நிலையும் இல்லாமல் இருந்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என கூறினார்.

Tags : Tha.Phaur , Town: Ariyalur District Town: Town, Karaikurichi, Vaduvur, Singarayapuram, Sudtamalli, Kotiyal, Kaduvetangurichi, etc.
× RELATED தா.பழூர் கீழ மைக்கேல்பட்டி தேவாலயத்தில் மாடுகளுக்கு புனித நீர் தெளிப்பு