கேரள மாநில அரசு உத்தரவு எதிரொலி சுற்றுலா பேருந்துகளுக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணி தீவிரம்:உரிமையாளர்கள் கண்டனம்

பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் டூரிஸ்ட்ஸ் பஸ்களுக்கு வெள்ளை நிற பெயின்ட் அடிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலக்காடு அருகே வடக்கஞ்சேரியிரில் நடந்த டூரிஸ்ட் பஸ் விபத்தில் 9 பேர் இறப்பிற்கு காரணமானதைத் தொடர்ந்து அனைத்து சுற்றுலா பஸ்களையும் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், இருமடங்கு வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் ஆகியவற்றையும், டிஸ்கோலைட்கள், ஒலிப்பெருக்கி பாக்ஸ்கள் அனைத்தைம்  அதிரடிஆய்வு மூலம் நீக்கம் செய்வதோடு, விதிமுறை மீறும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனால் பஸ் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வெள்ளை நிற பெயிண்ட்டிற்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம் டூரிஸ்ட் பஸ் உரிமையாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. பெயிண்ட் அடிக்கும் உத்தரவுக்கு பஸ் உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திடீரென  சுற்றுலா பஸ்களுக்கு பெயிண்ட் மாற்றுதல் மாநில அரசு கொண்டு வந்துள்ளது.  

பிட்னஸ் சான்றிதழ்கள் முடிந்த வாகனங்களுக்கு பெயிண்ட் மாற்றம் கொண்டு  வரலாம். ஆனால், பிட்னஸ் முடியாத வாகனங்களுக்கு பெயிண்ட் மாற்றம் செய்வது  என்பதென்றால் இரட்டிப்பு செலவாகிறது. இந்நிலையில் உள்ள வாகனங்களுக்கு  கால  தாமதம் அனுமதிக்க வேண்டும் என டூரிஸ்ட் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மாநில  போக்குவரத்து துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: