×

காரைக்காலில் அரசு செவிலியர் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர், உதவியாளரை கைது செய்ய வேண்டும்-செவிலியரின் கணவர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

காரைக்கால் : காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ்.இவரது மனைவி புனிதவள்ளி. கோட்டுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.புனிதவள்ளிக்கும் அவர் பணிபுரியும் சுகாதார மைய மருத்துவ உதவியாளர் அப்பு (எ) ராஜேஷுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் புனிதவள்ளி தகராறு தொடர்பாக தான் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷாவிடம் புகார் அளித்துள்ளார்.பின்னர் இருவரையும் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து செவிலியர் புனிதவள்ளி கடந்த சில நாட்களாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார்.இந்நிலையில் புனிதவள்ளி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து புனிதவள்ளி கணவர் ரமேஷ் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புனிதவள்ளியின் சடலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த செவிலியர் புனித வள்ளியின் கணவர் ரமேஷ் மற்றும் உறவினர்கள் புனிதவள்ளியின் உடலை வாங்க மறுத்து, புனிதவள்ளியை தற்கொலைக்கு தூண்டியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அந்தப் புகாரில் கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷா மற்றும் அதே மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரியும் அப்பு (எ) ராஜேஷ் ஆகிய இருவரும் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புனித வள்ளியின் சகோதரர் மகேஷ் குமார் \” முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

செவிலியர் புனிதவள்ளி சக ஊழியர்களின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டாரா ? வேறு காரணங்களா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.காரைக்காலில் அரசு செவிலியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Karaikal ,SP , Karaikal: Ramesh belongs to Kotucherry next to Karaikal. His wife is Punitavalli. Operating in Kotucherry area
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...