×

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு: காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து அதிகபடியான நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணை மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி அதிகாலையில் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பியதை தொடர்ந்து அன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் மறுநாள் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 33 ஆயிரத்து 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் வினாடிக்கு 200 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை வலுத்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபடியான நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Mattur Dam ,Kaviri , 1 lakh cubic feet of water is likely to be released from the Mettur Dam: Water Resources Department has issued a flood warning to the people on the banks of the Cauvery.
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...