நடிகர் ஆனார் ஷிகர் தவான்

மும்பை: இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பாலிவுட்டில் நடிகராகிவிட்டார். கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஸ்ரீசாந்த், இர்பான் பதான், ஜாகீர் கான் உள்ளிட்டோர் படங்களில் நடித்துள்ளனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டபுள் எக்ஸ்எல் என்ற இந்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டெல்லி, உ.பியை சேர்ந்த இரண்டு குண்டான பெண்களை பற்றிய கதை. அவர்கள் வெளிநாடுக்கு சென்று படும் அவஸ்தைகளை காமெடியாக படம் சொல்கிறது.

இந்த வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹுமா குரேஷி நடிக்கிறார்கள். இதில் ஹுமா குரேஷிக்கு ஜோடியாக ஷிகர் தவான் நடித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாகிறது. இதில் நடித்து பற்றி ஷிகர் தவான் கூறும்போது, எனது மனைவிதான் நடிக்க சொல்லி ஊக்கம் தந்தார். அதனால்தான் நடிக்க வந்தேன்’ என்றார்.

Related Stories: