இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர் கேரக்டரில் பிரகாஷ் ராஜ்

பெங்களூரு: இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர் வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் படம் விரைவில் உருவாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர். கர்நாடகத்தில் இயற்கை விவசாயத்தில் புரட்சி செய்தவர் சுபாஷ். அவரது விவசாய முறைகளை இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திர மாநிலங்களிலும் பின்பற்றி இயற்கை விவசாயத்தை அந்தந்த மாநில அரசுகள் திறம்பட கையாண்டுள்ளன.

இவர் விவசாய முறைகளில் பல்வேறு புதுமைகளை புகுத்தியவர். மகாராஷ்டிரம், கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களும் இவரது முறையை பின்பற்ற கர்நாடக அரசிடம் ஆலோசனைகளை பெற்று வருகிறது. சுபாஷ் பாலேகரை தனது வழிகாட்டியாக கருதி, அவரை பின்பற்றி வருபவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய்ராம். இவர் இப்போது சினிமா இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். இவர் இயக்கும் படம், சுபாஷ் பாலேகரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் சுபாஷாக நடிக்க பிரகாஷ் ராஜ் தேர்வாகியுள்ளார்.

Related Stories: