தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு குறித்த இணையவழி கருத்தரங்கம்!

சென்னை: தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் இணையவழி பயிற்சி வரும் 18.10.2022 தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைப்பெறவுள்ளது. இம்முகாமில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18-30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.  

மேலும் விவரங்களுக்கு: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி  மற்றும் கைபேசி எண்கள் எண்:  044-22252081, 22252082 , 7339497681, 8668102600

Related Stories: