×

தஞ்சையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்: தஞ்சை பூதலூர் செல்லப்பன்பேட்டையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நிகழ்வினை துவக்கி வைத்து, முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தோம் என்று கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைத்தார் .

இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறப்பு மகப்பேறியியல் மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே இக்கிராம மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து முகாமில் பயனடையலாம் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Special ,Veterinary Health ,Awareness Camp ,Thanju ,Minister ,Anil Mahesh , Special Animal Health Awareness Camp in Tanjore: Minister Anbil Mahesh inaugurated.
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு குறித்து...