உசிலம்பட்டி: அமெரிக்காவில் மகனும், மருமகளும் தற்கொலை செய்த நிலையில், பேரனை அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்த இ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. மகன் பிரவீன்குமார் அமெரிக்காவில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர், தமிழ்ச்செல்வி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு விஸ்ருத் மிலன்(2) என்ற மகன் உள்ளார்.கடந்த மே 2ம் தேதி அமெரிக்காவில் பிரவீன்குமார், தமிழ்ச்செல்வி தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இருவரது உடல்களையும் ஊருக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர். பேரன் அமெரிக்காவில் பிறந்ததால், குழந்தை அந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளது. இதனால் குழந்தையை இந்தியா அழைத்து வரமுடியவில்லை.