×

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு தொடர்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் விசாரணைக்கு ஆஜராக நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இத்தோல்வியை ட்ரம்ப் ஏற்று கொள்ளாத நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்ற கட்டத்திற்குள் புகுந்த குடியரசு கட்சி ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுப்பட்டனர். இது உலகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக அமெரிக்கா நாடாளுமன்ற குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ட்ரம்ப்பை விசாரிக்க திட்டமிட்டிருக்கும் அக்குழு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றது என்ற ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அக்குழு கூறியுள்ளது. 


Tags : Former ,President Trump ,US Parliament , US, Parliament, Violence, Trump, Investigation, Summons
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...