×

உ.பி.யில் நீடிக்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 50 மாவட்டங்களில் 1,300 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேசத்தில் நீடிக்கும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 1300 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோரக்ஹ்பூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் ரப்தி மற்றும் சரையு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்த மாவட்டத்தில் 160 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஊர்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளே வெள்ள நீர் புகுந்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்களும் நீரில் சூழப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஓடும் கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 50 மாவட்டங்களில் உள்ள 1300 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. விலை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகி வருகின்றன. வெள்ளப் பாதிப்புக்குள்ளான 9 லட்ச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.   


Tags : UP , UP, Prolonged, Heavy Rains, Villages, Flooded, Staggering
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை