இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் திமுக இளைஞர் அணி மாணவர் அணி நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன் அறிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர்கள் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வா?  இந்தி திணிப்பு திட்டத்தையும்; ஒரே பொது நுழைத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி,  இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது. மாநில உரிமைகளை பறிக்கக்கூடியதாகவும் சமூகநீதிக்கு எதிரானதாகவும் உள்ளது”.

இதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையேற்று  திருவள்ளூர் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (15 ம் தேதி  சனிக்கிழமை ) காலை 9 மணியவில் திருவள்ளூர் ரயில் நிலையம் எதிரில்  மாவட்ட கழக செயலாளர்கள் திருத்தணி தலைமையில் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், ஏ.ஆர்.டி.உதயசூரியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் டி.கே.பாபு, வெற்றி(எ)ராஜேஷ், ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர்.

இந்த கண்டன  ஆர்பாட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, எம்.பூபதி, நடுக்குத்தகை ஜெ.ரமேஷ், எல்லாபுரம் பி.ஜெ.மூர்த்தி, மாநில நிர்வாகிகள் சி.எச்.சேகர், ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், மாவட்ட அவைத்தலைவர்கள் கே.திராவிடபக்தன், மு.பகலவன் நடுக்குத்தகை ம.ராஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர். முடிவில் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் நன்றி கூறுகிறார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில   மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், வார்டு, கிளை கழக செயலாளர்கள்,  நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் நமது கண்டன குரல் எதிரொலிக்கும் விதமாக அமைந்திட, கருஞ்சட்டை அணிந்து வந்து  சிறப்பிக்க வேண்டும் என கேட்டு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Stories: