போக்குவரத்துக்கு தற்காலிக இரும்பு பாலம் மெட்ரோ ரயில் பணிகளுக்காக அடையாறு மேம்பாலம் இடிப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அடையாறு ஆற்றின் கீழ் திருமயிலை, பக்கிங்காம் கால்வாயில் 58.33 மீட்டரும், அடையாறு ஆற்றில் 666.3 மீட்டரும், இந்திரா நகர் பக்கிங்காம் கால்வாயில் 1219.86 மீட்டர் தூரமும் தண்ணீருக்கடியில் சுரங்கப்பாதை அமைகிறது. அதன்படி பசுமை வழிச்சாலை முதல் அடையாறு ஆற்றின் கீழ் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதை மற்றும் அடையாறு பகுதியில் அமைய உள்ள அடையாறு மெட்ரோ ரயில் நிலையத்திற்காக, அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது பாலத்தின் திருவான்மியூர் செல்லும் பகுதி இடித்து தரைமட்டமாக்கப்பட  உள்ளது. எனவே பசுமை வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில்  சிக்காமல் இருப்பதற்காக, அடையாறு சந்திப்பு அருகில் தற்காலிக இரும்பு பாலம் ஒன்றை  அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: