உத்தவ் கட்சி வேட்பாளரின் ராஜினாமாவை ஏற்க மாநகராட்சிக்கு கெடு: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை: அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சிவசேனா உத்தவ் அணி வேட்பாளரின் ராஜினாமா கடிதத்தை இன்று காலைக்குள் ஏற்கும்படி மும்பை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா 2 அணிகளாக உடைந்து செயல்பட்டு வரும் நிலையில், இக்கட்சி சின்னத்தையும், கட்சி பெயரையும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் முடக்கியது. இதனால், அடுத்த மாதம் 3ம் தேதி இம்மாநிலத்தில் அந்தேரி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் உத்தவ் அணி புதிய கட்சி, சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதில், லட்கேயின் மனைவி ருதுஜா லட்கே உத்தவ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மாநகராட்சி ஊழியராக உள்ள ருதுஜா, தனது ராஜினாமா கடிதத்தை கடந்த மாதம் 2ம் தேதியே அளித்த விட்ட போதிலும், மும்பை மாநகராட்சி இன்னும் அதை ஏற்கவில்லை. இது ருதுஜாவை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது ராஜினாமாவை ஏற்கும்படி மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தல் ருதுஜா வழக்கு தொடர்ந்தார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், ராஜினாமாவை ஏற்காத மாநகராட்சி ஆணையரை கடுமையாக கண்டித்து, இன்று காலை 11 மணிக்குள் ருதுஜாவின் ராஜினாமாவை ஏற்கும்படியும் அவருக்கு உத்தரவிட்டது.

Related Stories: