×

ஒரே நாளில் மோடி, அம்பானி ஆக முடியாது: மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தலைவராக உள்ள முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி மீண்டும் தலைவராகும்  வாய்ப்பு இல்லை என்பது பேச்சாக உள்ளது. முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  செயலாளர் ஜெய்ஷா செயலாளராக தொடர உள்ள நிலையில் கங்குலிக்கு போதிய ஆதரவு இல்லாததால்  அவர் மீண்டும் போட்டியிடவில்லை என்று தகவல் பரவியுள்ளது. இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார் கங்குலி. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி, ‘பிசிசிஐ நிர்வாகி பதவியில் நீண்ட காலம் இருந்து விட்டேன்.  வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும்,  இந்தியாவுக்காக விளையாடுவது தான் சிறந்ததாக இருக்கும்.  ஆனால் நீங்கள் எப்போதும் வீரராக இருக்க முடியாது.

அதேபோல் எப்போதும் பிசிசிஐ தலைவராக  தொடர முடியாது.  ஆனால் இரண்டு பொறுப்புகளையம்  செய்தது மனநிறைவாக இருந்தது. நான் வரலாறை ஒருபோதும்  நம்பவில்லை. கிழக்கு பகுதியில் இருந்து யாரும் இந்த நிலைக்கு வந்ததில்லை.  நீங்கள் ஒரே நாளில் நரேந்திர மோடியாகவோ,  அம்பானியாகவோ ஆகி விட முடியாது. அங்கு செல்ல நீங்கள் பல மாதங்கள், ஆண்டுகள் உழைக்க வேண்டும். எனவே நிர்வாகியாக நீண்ட காலத்துக்கு, எப்போதும் நிர்வாகியாக நீடிக்க முடியாது. வேறு ஏதாவது ஒரு இடத்துக்கு செல்ல வேண்டியிருக்கும்’  என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவரின் பிசிசிஐ தலைவர் பதவிக் காலம் முடிவுக்கு வருவது உறுதியாகி உள்ளது. அடுத்த கட்டம் குறித்து அவர்  யோசிக்க ஆரம்பித்துள்ளதும் தெரிய உள்ளது.


Tags : Modi ,Ambani ,Sourav Ganguly , Can't become Modi, Ambani in one day: Sourav Ganguly breaks his silence
× RELATED ‘நாமே பாடுபட்டால் தான் வெற்றிக்கு...