×

3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டம்: சென்னை-பெங்களூர் மோதல்

சென்னை: கொரானா அச்சுறுத்தல் காரணமாக 2019-20ம் ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்  கோவாவுக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து 2020-21, 2021-22 ஐஎஸ்எல் தொடர்களும் ரசிகர்களின்றி மூடிய அரங்குகளில் கோவாவில்  மட்டும் நடந்தன. கொரோனா பரவலும், தாக்கமும் குறைந்து வரும் நிலையில் இந்த 2022-23ம் ஆண்டுக்கான 9வது ஐஎஸ்எல் தொடர்  அக்.7ம் தேதி கொச்சியில் தொடங்கியது. கூடவே அந்தந்த அணிகளுக்கு உரிய நகரங்களிலும் ஐஎஸ்எல் ஆட்டங்களும் நடக்கின்றன. ரசிகர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதனடிப்படையில்  சென்னையின் எப்சி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சொந்த ஊரில் நடக்கும் ஆட்டத்தில் விளையாட உள்ளது.  அதில் பெங்களூர் எப்சி அணியுடன் மோதுகிறது. முன்னாள் சாம்பியன்களான இந்த 2 அணிகளும் ஏற்கனவே தங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியுள்ளன. பெங்களூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வடகிழக்கு ஒன்றிய அணியையும்,  சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏடிகே மோகன் பகான் அணிையும் வீழ்த்தியுள்ளன. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் பயிற்சியாளர் தாமஸ் பிரட்ரிக், கேப்டன்  அனிரூத் தபா, ‘முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கி உள்ளோம். அதை தொடருவோம்’ என்றனர்.

Tags : ISL ,Chennai ,Bangalore , ISL football match in Chennai after 3 years: Chennai-Bangalore clash
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை