சொப்னா எழுதிய சுயசரிதையில் சிவசங்கருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்போது ஜாமீனில் உள்ளார். இவருடன் மிக நெருக்கமாக இருந்த கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரும் ஜாமீனில் வந்து, அரசு உயர் பதவியில் இருக்கிறார். சமீபத்தில் இவர் ‘அஸ்வதாத்மாவ் வெறும் ஒரு ஆன’ என்ற பெயரில் எழுதிய சுயசரிதையில், சொப்னாவின் சட்ட விரோத செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு ‘சதியின் பத்மவியூகம்’ என்ற பெயரில் சுயசரிதையை சொப்னா எழுதியுள்ளார். இது நேற்று வெளியானது. அதில் சிவசங்கருடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களும், முதல்வர் பினராய் விஜயன், சிவசங்கருக்கு எதிராக பல விவரங்களும் இடம் பெற்றுள்ளன.மேலும், சிவசங்கர் ஒரு வாலிபனைப் போல என்னை தீவிரமாக காதலித்தார். என்னை அவர், பார்வதி என்றுதான் செல்லமாக அழைத்தார்,’ என்று கூறியுள்ளார். இந்த சுயசரிதையில் ஒரு அத்தியாயத்திற்கு, ‘சிவசங்கரின் பார்வதி’ என்று சொப்னா பெயரிட்டுள்ளார். சொப்னாவின் இந்த சுயசரிதையின் விலை ரூ.250.

Related Stories: