×

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனி முத்திரை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

அகர்தலா: திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநில நீதித்துறை அகாடமியையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து ரவீந்திர சதபர்ஷிகி பவனில் இருந்து காணொலி காட்சி வழியாக அகர்தலாவில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியை திறந்து வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த திட்டங்கள் திரிபுராவின் கல்வி, நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி மாநிலத்தின் வளமான கலாச்சாரத்தை உயர்த்தும். இன்று பொருளாதார வளர்ச்சியுடன், வழக்கறிஞர் பணியும் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.

திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சட்டக் கல்விக்கான முக்கிய மையமாக உருவெடுக்கும். சர்வதேச அளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : President of the Republic ,Fluvupati Murmu , India's youth stand out in IT sector: President Drabupati Murmu is proud
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...