நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உளிட்டோர் தாக்கல் செய்த மனு  உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்ற முடிவுக்கு கட்டுப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்சநீதிமன்றத்தல் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்ந்து இவ்வழக்கை குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதியுள்ள 6 பெரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகேஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிசந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தல் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்கட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கொட்டுகொண்டனர்.

இந்த வழக்கில் தமிழநாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் நளினி, ரவிசந்திரன் ஆகியோரை சிறையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதன் இடையே நளினி, ரவிசந்திரன் தொடர்ந்து ராபட் பயர்ஸ், சாந்தன், ஜெயக்குமார் 3 பெரும் விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.  நளினி, ரவிசந்திரன், ராபட் பயர்ஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 5 பெரும் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி பி.ஆர். காவாய் அமர்வில் நாளை விசாரணைக்காக வரவுள்ளது.

Related Stories: