×

ஊழல் விஸ்வரூபம் எடுப்பதால் ஆடிப்போயிருக்கும் மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுச்சேரின்னு சொன்னாலே எல்லாம் புது புது பிரச்னையா வரும்போல….’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுவை  கதர் கட்சியில் இருந்து பிரிந்து தாமரையில் மக்கள் பிரதிநிதியான முழம்குமார்  இணைந்தார். அப்போதே எங்களுக்கு தேர்தல் செலவுக்கு பணம் வேண்டாம். அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று கேட்டாராம். அவரது  நிபந்தனையை தாமரை ஏற்றுக் கொண்டதாம். சட்டமன்ற தேர்தலில் 2 பேரும் ஜெயிச்சுட்டாங்க.  50 நாள் இழுபறிக்கு பிறகு இறுதியான அமைச்சரவை பட்டியல் புதுச்சேரியை கலவர பூமியாக மாற்றி உள்ளதாம். அமைச்சர் ஆவார் என நம்பி இருந்த நிலையில், தன் பெயர் அமைச்சரவை பட்டியலில்  இல்லாததால் அதிர்ச்சி அடைந்த முழம்குமார், அவரது மகனின் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் குதித்து தாமரை தலைமை அலுவலகத்தை சூறையாடினர். இதற்கிடையில்  முழம்குமார், டெல்லிக்கு சென்றார். ஏற்கனவே தாமரை தலைமை அலுவலகம்  சூறையாடினதால் கோபத்தில் இருந்த தலைமை, நீங்கள் தொகுதிக்கு சென்று கட்சி  வளர்ச்சி மற்றும் மக்கள் பணியில் ஈடுபடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு  இன்னும் சிறிது காலத்துக்கு பிறகு அமைச்சர் பதவி கட்சி வழங்கும் என கூறி  அனுப்பிவிட்டனர். அவருடன் சென்ற கட்சி பிரமுகரிடம், நிபந்தனை கூறி  தான் கட்சியில் சேர்ந்தேன். இதற்கு நான் மரியாதையாக கதர் கட்சியிலேயே  இருந்து இருப்பேன். இக்கரைக்கு அக்கரை பச்சை என நம்பி வந்தேன். இப்படி  இங்கேயும் மோசம் போயிட்டேன் என விடிய விடிய புலம்பி உள்ளார்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘விசுவல் மாறியும்… விசுவாசம் மாறல போலிருக்கே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் கலெக்டர்  ஆபிசுல மக்களோட தொடர்பு அலுவலரு தீவிர இலை விசுவாசியாம். அவர்  மட்டுமில்ல அந்த அலுவலகத்தில இருக்கிற கடைநிலை ஊழியர் வரை ஒட்டு மொத்த  மக்களோட தொடர்பு ஆபிசும் அப்படித்தான் இருக்குதாம். கரை வேட்டி கட்டாதது  ஒன்னு மட்டும் தான் பாக்கியாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னாடியும்,  இலை கட்சிக்காரங்களத்தான் ஆபிசுல பார்க்க முடியுது. இலை நிர்வாகிங்களுக்கு,  அரசு சார்ந்த தகவலை புள்ளிவிவரத்தோட அள்ளிக்கொடுக்குறாங்களாம். அரசு  நிகழ்ச்சிய மக்கள்கிட்ட ெகாண்டு போய் சேர்க்குறது தான், அங்க இருக்குற  மக்களோட தொடர்பு அலுவலர் வேலை. ஆனா, அவரோ அமைச்சருங்க ெசால்ற தகவல்,  அதிகாரிங்க சொல்ற தகவல்னு எதுவா இருந்தாலும் மக்களுக்கு தெரியப்படுத்தாம, பாதிய மூடி மறைச்சிடுறாராம். இதனால அரசோட நலத்திட்டங்கள், மாவட்ட  நிர்வாகம் சொல்ற தகவல் சரிவர மக்களுக்கு போய் சேர்றதே இல்லையாம். இப்படியே  போச்சுன்னா, வெயிலூர் மாவட்டத்துல அரசோட அனைத்து தகவலும் முழுசா  மக்களுக்கு போய் சேராதுன்னு கலெக்டர் ஆபிஸ்ல இருக்குற அதிகாரிங்களே  பேசிக்கிறாங்க….’’ என்றார் விக்கியானந்தா. ‘ஒரு துறையிலே 100 கோடி ஊழலா நம்பவே முடியல…’’ என்று ‘உச்’ கொட்டினார் பீட்டர் மாமா.‘‘இலை  ஆட்சியில் கடந்த ஓர் ஆண்டாக ஆவினில் 600க்கும் மேற்பட்ட பணியிடத்துக்கு  ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக ₹100 கோடி வரை துறை அமைச்சர், உயர்  அதிகாரிகள் முதல் ஆவின் அதிகாரிகள் வரை வசூல் செய்து பங்கு போட்டுள்ள பகீர்  தகவல் இப்ப வெளியாகி, ஒட்டுமொத்த ஆவினையும் கலக்கிகிட்டு இருக்காம். ஆட்சி  மாற்றம் ஏற்பட்டவுடன் ஆவின் நிர்வாக இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டு,  ஐஏஎஸ் அதிகாரி சாமியான நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணிநியமன  முறைகேடு தொடர்பாக அவரிடம் பல்வேறு புகார்கள் வந்ததாம். இதனால்,  தமிழகத்தில் உள்ள ஆவினில் கடந்த ஓர் ஆண்டில் போடப்பட்ட பணிநியமனம் தொடர்பாக  மறு ஆய்வு செய்ய வேண்டியது உள்ளதால், அனைத்து ஆவணத்தையும்  எடுத்துக்கொண்டு, சென்னை வரும்படி ஆவின் பொதுமேலாளர்களுக்கும் நிர்வாக  இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பிச்சிருக்காராம்… இந்த உத்தரவால்,  முன்னாள் அமைச்சரும், முன்னாள் நிர்வாக இயக்குநர்கள் 2 பேரும், ஆவின்  பொதுமேலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் ஆடிப் போயிருக்காங்களாம். இந்த  முறைகேட்டில் எத்தனை பேர் சிக்குவார்கள் என கூடிய விரைவில் தெரிய வருமாம்.  முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது புலம்பிக்  கொண்டிருக்காங்களாம்….’’என்றார் விக்கியானந்தா. ‘திரி ஸ்டார் காக்கிக்கு மெமோகொடுத்தது பரபரப்பாக இருக்காமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர்  பத்துர், மாவட்டத்துல புது எஸ்பி பொறுப்பேற்றுக்ெகாண்டாரு. இவருக்கு, கந்திலி  லிமிட்ல செயற்ைக மணல் உற்பத்தி செஞ்சி கடத்தல் செய்றதா புகார் போயிருக்கு.  இதனால் எஸ்பியே நேரடியா களத்துல இறங்கி, கையும் களவுமாக செயற்கை மணல்  உற்பத்தி ஏரியாவை கண்டுபிடிச்சிருக்காரு. உடனே மணல் கடத்தலை தடுக்க தவறிய, 3  ஸ்டார் காக்கிக்கு மெமோ கொடுத்துட்டாராம்.  அதுமட்டுமில்லாம,  நிலப்பிரச்னை தகராறில் விசாரணை நடத்த, எதிர்மனுதாரரை, மிரட்டும் விதமாக  பேசிய ஆடியோ 2 நாளைக்கு முன்னாடி வைரல் ஆச்சு, இதைகேட்ட எஸ்பி, ஜனங்க கிட்ட  மிரட்டும் விதமா பேசிய காரணத்துனால, உடனே 2 ஸ்டார் காக்கியையும்  ஏ.ஆர்.போலீசுக்கு மாத்திட்டாராம். வந்த உடனே எஸ்பி அதிரடி காட்டுராறேன்னு  மாவட்டத்துல இருக்குற காக்கிங்க பரபரப்பா பேசிக்கிறாங்க. அதேபோல இந்த  நடவடிக்கை கந்திலியில மட்டும் இல்லாம, வாணியம்பாடி, ஆம்பூர்னு அனைத்து  சப்டிவிஷன்லயும், ஒதுக்குப்புறமா இருக்குற சர்க்கிள் ஸ்டேஷன்களுக்கும்  எஸ்பி விசிட் அடிச்சு, பஞ்சாயத்து நடத்தி, சம்பாதிக்குற காக்கிங்க மேல  ஆக்‌ஷன் எடுக்கனும்னு ஜனங்க சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா….

The post ஊழல் விஸ்வரூபம் எடுப்பதால் ஆடிப்போயிருக்கும் மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,minister ,wiki yananda ,Puducherinna ,New New Prachnaya ,Peter ,Lotus ,New Kadar Party ,Viswarupam ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்