×

மசாஜூக்கு பின் ஒத்துழைக்க மறுத்ததால் பெண்ணின் கை, கால்களை கட்டி நகைகளை பறித்த வாலிபர் கைது: கட்டுமான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: மசாஜ் சென்டரில் மசாஜ் செய்த இளம் பெண் ‘அதற்கு’ ஒத்துழைக்காததால் ஆத்திரத்தில் அவரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை பறித்து சென்றார் கட்டுமான தொழிலாளி. கைதான அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கீதா(23). விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்து வருகிறார். கடந்த 5ம் தேதி காலை மசாஜ் சென்டருக்கு வந்த வாலிபருக்கு, சங்கீதா மசாஜ் செய்துள்ளார். பிறகு அந்த வாலிபர் பெண் ஊழியரிடம் ‘ஹாப்பி எண்டு’ செய்ய கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், இங்கு மசாஜ் மட்டும் தான் செய்வோம் என்று கூறி அந்த வாலிபரை வெளியே அனுப்ப முயன்றார்.

அப்போது திடீரென அந்த வாலிபர், சங்கீதாவை கீழே தள்ளி அவரது கை, கால்களை கயிற்றால் கட்டிவிட்டு, ‘எனக்கு ஹாப்பி எண்டு செய்ய மாட்டியா’ என்று கூறியபடி அவரது கன்னத்தில் சரமாரியாக அடித்துள்ளார். அதோடு இல்லாமல் அவர் அணிந்து இருந்த தாலி செயின், கால் சவரன் கம்மலை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே, கம்மல் மற்றும் கவரிங்கில் வாங்கி கொடுத்த தாலி செயினை  கேட்டு சங்கீதாவின் கணவர் தகராறு செய்துள்ளார். அப்போதுதான் மசாஜ் சென்டரில் நடந்த சம்பவத்தை கணவரிடம் சங்கீதா தெரிவித்துள்ளார். அதற்கு கணவர், கவரிங் செயின் போனாலும் பரவாயில்லை. கால் சவரன் கம்மல் என்ன ஆவது என்று கூறி காவல் நிலையத்தில் மனைவியை வைத்து அளித்தார். அதன் பிறகு சங்கீதா நேற்று முன்தினம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்படி போலீசார் செல்போன் எண்ணை வைத்து நேற்று முன்தினம் இரவே  அனாகாபுத்தூர் காமாட்சி நகர் 2வது தெருவை சேர்ந்த அஜித்(எ) சுரேஷ் (25) என்பவரை கைது செய்தனர். அவனிடம் இருந்து கவரிங் செயின் மற்றும் கால் பவுன் கம்மல் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் கைது செய்யப்பட்ட அஜித் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:விருகம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் டைல்ஸ் அமைக்கும் பணி செய்து வருகிறார். இவர் வாரக்கூலி வந்த உடன் கடந்த 5ம் தேதி மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த பெண் ஊழியர்களில் ஒருவர், மசாஜ் செய்ய ரூ. 1000 என்றும், எக்ஸ்ட்ரா சர்வீஸ் வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக ரூ. 2,500 என்று கூறியுள்ளனர். அதற்கு அஜித் ரூ. 1000 கொடுத்து முதலில் மசாஜ் செய்துள்ளார். பிறகு அஜித் தனக்கு எக்ஸ்டரா சர்வீஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சங்கீதா, எக்ஸ்டரா சர்வீசுக்கு வேறு நபர்கள் வருவார்கள். என்னால் முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு இல்லை நீ தான் எனக்கு வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். அதோடு இல்லாமல் ‘ஹாப்பி எண்ட்’ செய்ய சொல்லியும் வலியுறுத்தியுள்ளார். அதன் பிறகே அவரை தாக்கி உள்ளார் அஜித்.

பிறகு தாலி செயின் 5 சவரன் இருக்கும் என்று நினைத்து மறுநாள் அவர் வசிக்கும் பகுதியில் தெரிந்த அடகு கடை ஒன்றில் செயினை பரிசோதனை செய்துள்ளார். அதை பரிசோதனை செய்த அடகு கடைக்காரார் இது தங்கம் இல்லை. வெறும் கவரிங் நகை என்று கூறியுள்ளார். பல எதிர்ப்பார்ப்பில் இருந்த அஜித்துக்கு இது அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் வழக்கம் போல் அஜித் தனது வேலையை செய்து வந்துள்ளார். கொள்ளையடித்து ஒரு வாரம் ஆன நிலையில் மசாஜ் சென்டர் சார்பில் தன் மீது புகார் அளிக்காததால் நிம்மதியாக இருந்துள்ளார். சமீபத்தில் அளித்த புகாரில் சிக்கி கொண்டார். தன் எதிர்ப்பார்த்து சென்றது கிடைக்காததால் தான் தவறு செய்துவிட்டேன். கொள்ளையடித்த நகையும் கவரிங் நகையால் எனது உழைப்பும் வீணாகி போலீசாரிடம் சிக்கி கொண்டேன். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Tags : Volleyber , Youth arrested for tying woman's hands, feet and snatching jewelery after she refused to cooperate after massaju: construction worker sensational confession
× RELATED காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் பள்ளி...