×

வால்பாறை முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் காலமானார்

கோவை: கோவை சாயிபாபாகாலனியை சேர்ந்தவர் கோவை தங்கம் (74). இவருக்கு நேற்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இவருக்கு தில்லைநாயகி என்ற மனைவியும், ஸ்ரீவிஷ்ணு என்ற மகனும், ஸ்ரீசத்யா என்ற மகளும் உள்ளனர். மறைந்த கோவை தங்கம், கடந்த 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை வால்பாறை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், த.மா.கா உதயமானபோது அதில் இணைந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கோவை தங்கம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Valparai ,MLA ,Coimbatore , Former Valparai MLA Coimbatore passed away
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்