×

கம்பம் பள்ளத்தாக்கில் குருவைச் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரம்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க விவசாயிகள் கோரிக்கை

தேனி : கம்பம் பள்ளத்தாக்கில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் சுற்று வட்டாரத்தில் முல்லை பெரியாறு தண்ணீரை பயன்படுத்தி 14,707 ஏக்கர் இருபோக விவசாயம் நடைபெறுகிறது. கடந்த ஜூன் மாதம் நடவு செய்யப்பட்ட குருவை சாகுபடி முடிந்து தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நல்ல விளைச்சல் கிடைத்தும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கம்பம், கூடலூர், உத்தம பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்காததால் தனியார் பல்வேறு குறைகளை தெரிவித்து நெல் மூட்டைகளை மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாகும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கம்பம் பள்ளத்தாக்கில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 60 கிலோ நெல் மூட்டைக்கு ரூ.1500 வழங்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Tags : Guru ,Gampam valley , pole, guru, cultivation, government, direct, paddy, purchase, open, request
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு