திருச்சுழி பகுதியில் மழையின்றி கருகும் மானாவாரி பயிர்கள்-விவசாயிகள் கவலை

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் போதிய மழை இல்லாததால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.திருச்சுழி பகுதியில் உள்ள ம.ரெட்டியபட்டி, கத்தாளம்பட்டி, வேடநத்தம், தம்மநாயக்கன்பட்டி உள்பட பல கிராம பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களில், கடந்த ஆகஸ்ட் இறுதி வாரத்தில் பெய்த மழையால் நிலக்கடலை, கம்பு, மக்காச்சோளம், உளுந்து மற்றும் பருத்தி ஆகிய மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர்.

இப்பயிர்கள் ஓரளவிற்கு வளர்ந்த நிலையில், போதிய மழை இல்லாததால், பயிர்கள் கருகி வருகின்றன. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போதிய மழை இல்லாததால், நிலங்களில் சாகுபடி செய்த பருத்தி, உளுந்து பயிராகாமல் மண்ணோடு மண்ணானது. இதனால், விவசாயிகள் ரூ.பல லட்சத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘ஆகஸ்ட் இறுதியில் பெய்த மழையை நம்பி, எங்கள் ஊரில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, குதிரைவாலி ஆகியவற்றை பயிரிட்டோம். செப்டெம்பர் முதல் வாரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால், மழை பெய்யவில்லை.

பயிர்கள் கருகி வருகின்றன. கடந்த மாதம் நிலத்தில் பருத்தி, உளுந்து விதைத்திலிருந்து மழை இல்லை. கருமேகமாக திரளும் மேகம் போக்குகாட்டி மறைந்து விடுகிறது. தற்போதைய நிலையில், விவசாயிகளுக்கு ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யும் என காத்திருக்கிறோம்’ என கூறினர்.

Related Stories: