×

பிரிட்டன் மன்னர் சார்லசுக்கு அடுத்த ஆண்டு முடிசூட்டு விழா: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

லண்டன் : பிரிட்டன் 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரிட்டன் ராணி எலிசபெத் 96-வது வயதில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னனாக அறிவிக்கப்பட்டார். 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படும் அவர் கடந்த மாதம் அரியணை ஏறினார். இந்நிலையில், 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அவையில் நடைபெறும் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

3-ம் சார்லஸ் மன்னருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில் பிரிட்டன் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான மன்னர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார். முடிசூட்டு விழாவிற்கு பிறகே அரசராக சார்லசின் ஆட்சி அதிகாரபூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுபடி கையில் செங்கோல் ஏந்திய படி 3-ம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமருவார். பிறகு மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு 3-ம் சார்லஸ் மன்னருக்கு கிரீடம் சூட்டப்படும். பிறகு பக்கிங்ஹாம் அரண்மனையில் மாடத்தில் இருந்து மன்னர் சார்லஸ் மக்களுக்கு உரையாற்றுவார்.    


Tags : Britain ,King Charles ,Buckingham Palace , Britain, King, Charles, next, year, coronation, ceremony, Buckingham, palace, information
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...