×

திருக்காட்டுப்பள்ளி பூதலூர் கோவில்பத்தில் வரிசைப்படி தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல்-ஈரப்பதம் உள்ள நெல்லையும் எடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி : வரிசைப்படி தினமும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யபடுகிறது. மழை காலம் என்பதால் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்காட்டுப்பள்ளி பூதலூர் கோவில்பத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது. பூதலூரை பகுதியில் சுமார் 800 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடையும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விழைந்த நெல் களை தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழத்தித் தில் கொண்டு வந்து போடுவது சம்மந்தமாக பூதலூர் கோவில்பத்தை சேர்ந்த விவசாயி மைனர் துரை மகன் அருண்மொழி 33 என்பவர் அளித்த பேட்டியில்,பூதலூர் கோவில் பத்தை பகுதியில் 7 ஏக்கர் குறுவை நெல் சாகுபடிவ செய்து வருகிறேன், நடவு பணி முதல் அறுவடை வரைக்கும் 7 ஏக்கருக்கும் சுமார் 1.60 ஆயிரம் செலவாகிறது. விவசாயிகளாகிய நாங்கள் மிகவும் சிற மப்பட்டு விவசாயம் செய்து அதை இயந்திரம் மூலம் அறுவடை செய்து டிராக்டர் மூலம் கூலிக்கு ஆட்களை வைத்து நெல்லை ஏற்றி திருக்காட்டுப்பள்ளி செங்கிப் பட்டி சாலையில் கொட்டி காய வைத்து அந்த நெல் களை நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ஆட்களை வைத்து ஏற்றி கொண்டு வந்து சேர்க்கும் போது மீண்டும் மழை பெய்வதால் நெல் குவியல்கள் மழையில் நனைந்து விடுகிறது.

ஆனால் கொள்முதல் நிலையத்தில் அரசு அறிவித்து இருப்பது விவசாயிகளிடமிருந்து 17% சதவிதம் ஈரபதம் வைத்து எடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் விவசாயிகளாகிய நாங்கள் மீண்டும் தார்சாலைக்கே சென்று நெல்லை காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.ஒரு நாளைக்கு எங்களுக்கு நெல்லை காய வைக்க ஆகும் செலவு ரூ.4 ஆயிரம். இப்படி நாங்கள் பல முறை அலைய வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் பூதலூர் கோவில்பத்தில் அரசுக்கென்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற் கென்று அரசு க்கு சொந்தமானஇடம் இல்லை விவசாயிகளுடைய அறுவடை செய்த நெல்லை காய வைக்க போதிய இடம் இல்லை.

தற்போது கோவில் வளாகத்தில் சேறும் சகதியுமான இடத்தில் தான் நாங்கள் எங்களது நெல்லை கொட்டி வைத்துள்ளோம் தொடர்ந்து மழை பெய்தால் நெல்கள் முளைத்து வீணாகிவிடும் அரசு 17% சதவிகிதம் உள்ள வால்லை மட்டும் எடுக்க சொல்வதால் எங்களுக்கு மிகவும் சிறமமாக இருக்கிறது. எனவே தமிழக முதலைமைச்சரின் கவனத்திற்கு மாவட்ட கலெக்டர் கொண்டு சென்று விவசாயிகளின் குறுவை நெல்லை மட்டும் 20 - 22. % சதவிகிதம் கூடுதலாக ஈரபதம் வைத்து எடுக்க வலியுறுத்த வேண்டும் என விவசாயி கூறினார்.

மேலும் சென்டரில் தேங்கியுள்ள அதிகபடியான நெல் மூட்டைகளை விரைந்து எடுத்து குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும் அப்படி எடுத்துச் சென்றால் இங்கு 10 நாட்களாக தேங்கி கிடக்கும் நெல் களை விரைவில் எடுத்து விவசாயிகளுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் விவசாயிகளின் நெல்லை வரிசைப்படி எடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 1000 மூட்டை வீதம் பிடிக்கப்படுறது. என்றும் தெரிவித்தார்.

Tags : Thirukkattupalli , Thirukkattupalli: 1000 bags of paddy are procured daily in order. Paddy with moisture due to rainy season
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு