மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சஹார் விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பும்ரா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.