புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் ஒ.பன்னீர்செல்வம் நெடுஞ்சாலைதுறை அமைச்சராக இருந்த போதும், எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோதும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
குறிப்பாக இவர் நெடுஞ்சாலைகளில் பாதிக்க கூடிய ரிஃப்ளெக்டர், மற்றும் பெயர் பலகைகளை வைக்க கூடிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளார். இவர் பெறக்கூடிய ஒப்பந்தங்கள் U/A தர சான்று படி எடுக்க வேண்டும். ஆனால் அவர் தரமற்ற பொருட்களை உபயோகித்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.