36-வது தேசிய விளையாட்டு போட்டி: 25 தங்கம், 21 வெள்ளி , 27 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 5ம் இடம் பிடிப்பு..!!

காந்திநகர்: 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி 5வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ராணுவத்தின் சர்வீசஸ் அணி ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

25 தங்கம், 21 வெள்ளி , 27 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் 5 தமிழ்நாடு அணி 5வது இடம் பிடித்துள்ளது. தடகள போட்டியில் மட்டும் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.  செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழா சூரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 121 பதக்கங்களுடன் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மராட்டியம், ஹரியானா, கர்நாடகா முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பேட்மிண்டன் தரவரிசை: லக்சயா சென் 8-வது இடம்

உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் லக்சயா சென் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 21 வயதான லக்சயா சென், பேட்மிண்டன் தரவரிசையில் முதல் முறையாக 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories: