இன்ஸ்டாகிராமில் பழகியதால் விபரீதம் வேறு ஒருவருடன் ஆட்டம் மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது

பெரம்பூர்: அயனாவரத்தில், இன்ஸ்டாகிராமுக்கு அடிமையானதால் வேறு ஒருவருடன் ஆட்டம் போட்ட மனைவியை சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் சாலமன் (20). இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி (19) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சாலமன் எலக்ட்ரீசியசன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல்களுக்கு  ஏற்ற வகையில் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். நாளடைவில் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பலமுறை சாலமன் ஈஸ்வரியிடம் எச்சரித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஈஸ்வரி வேறு ஒரு நபரிடம் சேர்ந்து சினிமா பாடல்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்களாக வெளியிட்டு வந்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இருவருக்கும் இடையே மீண்டும் வீடியோ போட்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சாலமன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் இடது கை மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் ஓங்கி வெட்டியுள்ளார். ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாலமனை கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி மற்றொருவருடன் ஆட்டேம் போட்ட மனைவியை கணவன் சரமாரியாக வெட்டிய சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: