கிராமங்களில் காங். வேட்டை பாஜ.வுக்கு மோடி எச்சரிக்கை

அகமதாபாத்: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கன்டோர்னா நகரில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ‘பாஜ தொண்டர்களும், ஆதரவாளர்களும்  காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

என்னை களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அது,  இப்போது அதை நிறுத்திவிட்டு, கிராமங்களில் மக்களின் வாக்குகளை கைப்பற்றும் நோக்கத்தில் அமைதியாக செயல்பட்டு வருகிறது.  எதிர்கட்சிகளின் இந்த மவுன வியூகம் விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,’ என தெரிவித்தார்.

Related Stories: