×

தொன்மையான 92 கோயில்களில் திருப்பணி தொடங்கலாம்: அறநிலையத்துறை வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: இந்து சமய  அறநிலையத்துறையின் கீழ் உள்ள, தொன்மையான 92 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 42வது வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்,  விருதுநகர் சின்னவாடி சென்னகேசவப் பெருமாள் கோயில், சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயில், சேலம் மேட்டூர் பத்திரகாளியம்மன் கோயில், பவானி வரதராஜப் பெருமாள் கோயில், கன்னியாகுமரி கண்ணன்புதூர் முப்பிடாரி அம்மன் கோயில், அகத்தீஸ்வரம் பதினெட்டாம்படி இசக்கியம்மன் கோயில், உட்பட 92 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், வல்லுநர் குழு உறுப்பினர்கள், தலைமை பொறியாளர், தொல்லியல் துறை வல்லுநர்கள்,கண்காணிப்பு பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Charitable Trusts Expert Committee , Restoration work on 92 ancient temples can begin: Charitable Trusts Expert Committee approves
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...