தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனு தள்ளுபடி

டெல்லி : தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மிலானி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஏற்கனவே ரவீந்திரநாத் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்ததை அடுத்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Related Stories: