×

கத்தை, கத்தையாக ரூ.7 லட்சம் பணத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயி-நெல்லையில் பரபரப்பு

நெல்லை :  வங்கியில் கடன் தொகையை திரும்ப வாங்க மறுப்பதாக கூறி, கத்தை கத்தையாக பணத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த திசையன்விளை விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சிசில் (61). இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் 19 ½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில், கடந்த 2005ம் ஆண்டு அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனில் ரூ.50 ஆயிரம் மட்டுமே திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

கடன் தவணை காலாவதியான நிலையில், அதற்கான அறிவிப்பு வங்கி மூலம் இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரூ.2 லட்சத்தை மீண்டும் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் மீதமுள்ள தொகையை எதுவும் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தததன் காரணமாக வங்கியின் மூலம் நிலத்தை ஏலம் விடுவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
சிசில், தனது கடன் தள்ளுபடி ஆகிவிடும் என நம்பியுள்ளார். ஆனால் இவருக்கு கடன் தள்ளுபடி ஆகவில்லை.

தொடர்ந்து வங்கியை அணுகி கடனை திருப்பி செலுத்துவதற்கு ஏதாவது சலுகை வழங்க, சிசில் தரப்பில் வங்கி நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது. வட்டியை தவிர்த்து பணத்தை மட்டும் கட்ட வங்கி தரப்பில் கூறியுள்ளனர். ஆனால் அதனை திருப்பிச் செலுத்த சென்றபோது வங்கியில் உள்ள அதிகாரிகள், மண்டல அலுவலகத்திற்கும் அங்குள்ள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கும் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள் தன்னை தொடர்ந்து அலைக்கழிப்பதால் கலெக்டரிடம் ரூ. 7 லட்சத்தை ஒப்படைக்க அவர் நேற்று கத்தை, கத்தையாக பணத்தோடு கலெக்டர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயி சிசிலை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க உதவி செய்தனர்.

இந்நிலையில் வங்கி தரப்பில் ‘விவசாயி பெற்ற கடனுக்கு வட்டி முதல் அனைத்தும் சேர்த்து ரூ.66 லட்சம் வரை கட்ட வேண்டி உள்ளதாகவும், ஏராளமான கால அவகாசம் வழங்கப்பட்டும்
அவர் பணத்தை திருப்பி செலுத்துவதற்கான முயற்சி எடுக்கவில்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Paddy , Nellai: Vektaravilai came to hand over the money to the collector by saying that he refused to take back the loan amount from the bank.
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...